இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இந்த வரி மத்திய அரசால் அவ்வப்போது தற்காலிகமாகத் தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம்.
பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி அமைப்புகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளன. உள்நாட்டு பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்க இந்த வரி விலக்கு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு, வரும் ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
