101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்  

Estimated read time 1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சென்னையில் காலமானார்.
அவரது மறைவு தமிழக அரசியல் களத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததை தொடர்ந்து, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author