உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அதோடு, கலகக் கட்டுப்பாட்டு முகவர்கள் உக்ரைனில் “போர் முறையாக” பயன்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
“இத்தகைய இரசாயனங்களின் பயன்பாடு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. உக்ரேனியப் படைகளை வலுவூட்டப்பட்ட நிலைகளில் இருந்து வெளியேற்றவும், போர்க்களத்தில் தந்திரோபாய ஆதாயங்களை அடையவும் ரஷ்யா இதனை பயன்படுத்துகிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.1993 இரசாயன ஆயுத மாநாட்டை (CWC) செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ஹேக்-அடிப்படையிலான இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பால் (OPCW) குளோரோபிரின் தடைசெய்யப்பட்ட மூச்சுத்திணறல் ஆயுதமாக பட்டியலிடப்பட்டுள்ளது.