உலகப் பொருளாதாரத்துக்கு இயக்காற்றலை ஊட்டிய வசந்த விழா

Estimated read time 1 min read

இவ்வாண்டு வசந்த விழா விடுமுறையில், சீனா நாடு அளவில் பிரதேசத்தைக் கடந்த பயணிகளின் எண்ணிக்கை 280 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்தது. நாட்டளவில் முக்கிய உணவு மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களின் தினசரி விற்பனை தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காடு அதிகரித்தது. சீன எல்லையைக் கடந்த பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 77 இலட்சத்து 96 ஆயிரமாகும். மேலும், வசந்த விழா காலத்தில் திரைப்பட வசூல் 570 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்துக்கு ஒரு சிறப்பான துவக்கத்தை இத்தரவுகள் வழங்கியுள்ளன. குதிரை ஆண்டு வசந்த விழா, உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளது என்று ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலியின் மக்கள் தொடர்புச் சம்மேளனத்தின் உரிமம் பெற்ற உறுப்பினர் ஆண்ட்ரியா சிச்சினி கூறுகையில், வசந்த விழா பற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தையை விரிவாக்கும் முக்கிய வழிமுறைகளாகும் என்றார்.

மேலும், வசந்த விழா போக்குவரத்து, உலகச் சுற்றுலா துறைக்கு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்று அமெரிக்காவின் உலகப் பயணம்(World Travel) என்னும் இதழ் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

மங்களமான மற்றும் மகிழ்ச்சியான குதிரை ஆண்டு வசந்த விழாவின் மூலம், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறையையும் செல்வாக்கையும் உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. மேலும், இவ்வாண்டில், பல சர்வதேச நிறுவனங்கள், சீனப் பொருளாதாரத்தின் மீதான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author