வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் தென்னிந்தியப் பகுதிகளிலும் காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், காற்றின் தரத்தைக் கட்டுப்படுத்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது மற்றும் பழைய வாகனங்களைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நச்சுக் காற்று நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தென் மாநிலங்களையும் பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; அதிர்ச்சித் தகவல்
