சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு அக்டோபர் 20 முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு ஷி ச்சின்பிங் அளித்த பணியறிக்கை இந்த முழு அமர்வு கேட்டறியப்பட்டது.
தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வகுத்த 15ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கான ஆலோசனை இந்த முழு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.
அடிப்படையில் சோஷலிச நவீனமயமாக்கத்தை நனவாக்கும் முக்கிய காலக்கட்டம், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் ஆகும். அடிப்படையில் சோஷலிச நவீனமயமாக்கத்தை நனவாக்கும் போக்கில் இக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த முழு அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
உயர் தர வளர்ச்சி மேலதிகமான சாதனைகளைப் படைக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய சுயநிர்ணயம் மற்றும் சுய வலிமை பெருமளவில் உயர வேண்டும். மேலும் பன்முகங்களிலும் சீர்த்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும். சமூக நாகரிக நிலை தெளிவாக உயர வேண்டும்.
பொது மக்களின் வாழ்க்கை தரம் இடைவிடாமல் உயர வேண்டும். அழகான சீனா என்ற பணி முக்கிய முன்னேற்றமடைய வேண்டும். தேசிய பாதுகாப்பு நிலை மேலும் வலுவடைய வேண்டும். இவை எல்லாம், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகளாகும் என்று இந்த முழு அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
