அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்: பஹ்ரைன், குவைத், யுஏஇ தளங்களில் குண்டுவெடிப்பு  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது மெகா பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த மோதலில் பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
“தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என ஈரான் அறிவித்து இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதலால் அங்குக் கடுமையான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
மொபைல் போன்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author