‘அபெக்ஸ்’ என்று அன்புடன் பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸின் புதைபடிவ எச்சங்கள் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் $44.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
அதன் விற்பனை மதிப்பீடான $4-6 மில்லியனை விட அதிக விலைக்கு விற்பனையான இந்த ஏலப்பொருள், டைனோசர் புதைபடிவங்களுக்கான புதிய சாதனையை படைத்தது.
முந்தைய சாதனையாக “ஸ்டான்” என்ற டைரனோசொரஸ் ரெக்ஸ் புதைபடிவம், 2020 இல் $31.8 மில்லியன் ஈட்டியது.
அபெக்ஸின் கிட்டத்தட்ட முழுமையான புதைபடிவமானது 2022ஆம் ஆண்டில் கொலராடோவின் டைனோசர் நகருக்கு அருகிலுள்ள வணிக பழங்கால ஆராய்ச்சியாளர் ஜேசன் கூப்பருக்கு சொந்தமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி அளவும் கொண்ட அபெக்ஸ், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்
