இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
மேலும் அது ஒரு “பயங்கரவாத சேனல்” என்று குறிப்பிட்டு, அது பயங்கரவாதத்தை பரப்புகிறது எனவும் கூறினார்.
இது சார்ந்த சட்டம் ஒன்று, நேற்று இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது பெஞ்சமின் இதனை தெரிவித்தார்.
நெதன்யாகுவின் இந்த உறுதிமொழி அல் ஜசீராவுக்கு எதிரான இஸ்ரேலின் நீண்டகால பகையை அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், காசா போரை நிறுத்துவதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தோஹா அரசாங்கத்துடன் பதட்ட உணர்வுகளையும் இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.
காரணம், இந்த சேனலின் தலைமையகம் கத்தார் ஆகும்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து கத்தாரோ அல்லது ஒளிபரப்பு நிறுவனமோ உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.