10 புதிய AMRIT மருந்தகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்  

Estimated read time 1 min read

மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
AMRIT திட்டத்தின் 10வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விதமாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இந்த புதிய மையங்களைத் தொடங்கி வைத்தார்.
இப்புதிய மையங்கள் சண்டிகர், ஜம்மு, எய்ம்ஸ் தியோகர், ஸ்ரீநகர் பல் மருத்துவமனை, மும்பை துறைமுகம், ஐஐடி ஜோத்பூர் உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களில் செயல்படத் தொடங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author