2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கை வெளியீடு

Estimated read time 0 min read

சீன மக்கள் குடியரசின் 2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையை, சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் நாள் வெளியிட்டது.

முதற்கட்ட கணக்கீட்டின்படி, 2025ஆம் ஆண்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரத்து 187.9 பில்லியன் யுவானை எட்டி, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 5.0 விழுக்காடு அதிகமாகும். இதில், முதன்மைத் தொழில், இரண்டாம் நிலைத் தொழில் மற்றும் மூன்றாம் நிலைத் தொழிலின் உற்பத்தி மதிப்பு, 2024ஆம் ஆண்டு இருந்ததை விட முறையே 3.9, 4.5 மற்றும் 5.4 விழுக்காடு அதிகரித்து, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் முறையே 6.7, 35.6 மற்றும் 57.7 விழுக்காடு பங்கு வகித்தது.

மேலும், இறுதி நுகர்வுச் செலவு, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியில் 2.6 சதவீதப் புள்ளிகள் வகித்தது. மொத்த மூலதன உருவாக்கம், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியில் 0.8 சதவீதப் புள்ளிகள் வகித்தது. சரக்கு மற்றும் சேவையின் நிகர ஏற்றுமதி மதிப்பின் வளர்ச்சியில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பை 1.6 சதவீதப் புள்ளிகள் வகித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author