அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.
திங்கட்கிழமை ஓமன் வளைகுடாவில் பயணித்த மார்ஷல் தீவுகளின் கொடி ஏந்திய ‘MKD VYOM’ என்ற எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு ஏந்திய ஆளில்லா படகு (Drone Boat) மோதித் தாக்கியது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறையில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக ஓமன் அரசு செய்தி கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 1-ஆம் தேதி மஸ்கட் கடற்கரை அருகே நடந்த இந்த தாக்குதலில் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்த மாலுமியின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஓமன் கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு
