சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தொடருக்கான செய்தித் தொடர்பாளர் லியூ ஜெயி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நடப்பு கூட்டத்தொடர் பற்றி அறிமுகம் செய்ததோடு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மக்கள் மாமண்டபத்தில் தொடங்கி, மார்ச் 11ஆம் நாள் முற்பகல் நிறைவு பெற உள்ளது. 7 நாட்கள் கூட்டத்தொடரின் போது, துவக்க கூட்டம், நிறைவுக் கூட்டம், இரண்டு முழு அமர்வு உரைகள் நடத்தப்பட உள்ளன. வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த குழுக் கூட்டங்களும் நடைபெற உள்ளன. துவக்க கூட்டம் மற்றும் நிறைவுக் கூட்டத்துக்கு சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள் பார்வையாளராக அழைக்கப்பட உள்ளனர்.

சீனப் பொருளாதாரம் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த ஓராண்டில் வெளிப்புற சூழ்நிலை கொந்தளிப்பாக இருந்தாலும், அழுத்தங்களை எதிர்கொண்டு வளர்ச்சி அடைந்த சீனப் பொருளாதாரம், பெரும் நெகிழ்வுத்தன்மையையும் உயிராற்றலையும் வெளிக்காட்டியுள்ளது. சீனப் பொருளாதாரத்தின் மொத்த அளவு 140 ட்ரில்லியன் யுவானை எட்டியதோடு, அதன் வளர்ச்சி வேகமும் உலகின் முக்கிய பொருளாதார சமூகங்களில் தொடர்ந்து முன்னிலையைப் பராமரித்துள்ளது என்று தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author