சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மௌரித்தானியா வெளியுறவு அமைச்சர் முஹம்மது சேலம் ஓல்ட் மர்சூஜ் ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
அரபு நாடுகள் லீக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சரும் இவ்வமைப்பின் தலைமைச் செயலாளருமான அகமது அபு கீத் இதில் கலந்து கொண்டார்.
சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர்கள் கூட்டத்துக்கான பெய்ஜிங் அறிக்கையும், சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 2024முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான செயல்பாட்டுத் திட்டமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சீன-அரபு நாடுகள் உறவை மேம்படுத்துவதற்கு முதலாவது சீன-அரபு உச்சிமாநாடு நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை ஆற்றியது பெய்ஜிங் அறிக்கையில் வெகுவாகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதோடு, சீன-அரபு நாடுகள் உறவை மேலும் ஆழமாக்கி இம்மன்றத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரஸ்பர மைய நலன் மற்றும் முக்கியக் கவலை கொண்ட பிரச்சினைகள் குறித்து ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க வேண்டும் என்றும், புதிய யுகத்தில் இரு தரப்பின் பொது எதிர்கால சமூகத்தைப் பன்முகங்களிலும் முழு மூச்சுடன் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.
இரு தரப்புக்குமிடையேயான பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புக்கான தேவையும் திட்டவரைவும் சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் செயல்பாட்டுத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டன.