சீனாவின் ஏற்றுமதி பொருட்களின் புதிய தனிச்சிறப்புகள்

Estimated read time 0 min read

சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.

இதில் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

இவ்வாண்டில் சீனாவின் ஏற்றுமதி பொருட்கள் புத்தாக்க தன்மையையும் புதிய தன்மையையும் கொள்கின்றன. உயர் நிலை தொழில் நுட்பம், உயர் கூடுதல் மதிப்பு, தூய்மை ஆகிய தனிச்சிறப்பு மிக்க பொருட்கள் சீனாவின் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன என்றார்.

மின்னாற்றல் வாகனங்கள், லித்திய மின்கலன், ஒளிவோல்ட்டா பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அளவு, 50.7 விழுக்காடு அதிகரித்தது. இது அன்னிய வர்த்தகத்தின் உந்து ஆற்றலாக திகழ்கின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைக் கூட்டாக கட்டியமைக்கும் நாடுகளுக்கான ஏற்றுமதி 20 விழுக்காடு அதிகரித்தது. ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அளவு முறையே 20.3 19.9 விழுக்காடாக அதிகரித்தது. தனிநபர், அன்னிய முதலீட்டு மற்றும் அரசு சொந்த தொழில் நிறுவனங்களும் ஒன்றிணைந்து, வேகமாக வளர்ந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author