மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
