இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.இந்நிலையில், ‘சலார்’ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘சூரியன் குடையா நீட்டி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுவது போன்று இந்த பாடல் உருவாகியுள்ளது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வைரலாகும் சலார் படத்தின் பாடல்
You May Also Like
More From Author
ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைந்தது
July 19, 2024
இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சேவை வர்த்தகத் தொகை அதிகரிப்பு
August 30, 2024
