குட் நியூஸ்..! இனி விபத்து சிகிச்சைக்கு காசு தேவையில்லை… ₹1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை…!

Estimated read time 1 min read

இந்தியாவில் ஆண்டுதோறும் நிகழும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள், எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கின்றன.

விபத்து நிகழ்ந்தவுடன் கிடைக்க வேண்டிய ‘பொன்னான நேரத்தில்’ (Golden Hour) முறையான மருத்துவ உதவி கிடைக்காததும், அவசரச் சிகிச்சைக்கான பெரும் செலவை ஏழைக் குடும்பங்களால் சுமக்க முடியாததுமே அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகின்றன.

இந்த இக்கட்டான சூழலை மாற்றியமைக்கவும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் தடையின்றி உயர்தரச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு PM RAHAT (Road Accident Victims-Hospitalisation; Assured Treatment) எனும் உன்னதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நிதி நெருக்கடி தடையாக இல்லாமல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பதற்கான மருத்துவ உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அவசர சிகிச்சை தாமதத்தை குறைப்பதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை வழங்கப்படும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். விபத்து நடந்த நாள் முதல் 7 நாட்கள் வரை இந்தநிதி பாதுகாப்பாக இருக்கும்

நெடுஞ்சாலை, நகரச் சாலை அல்லது கிராமப்புற பாதை – எந்த இடத்தில் விபத்து நடந்தாலும் திட்டம் பொருந்தும். வருமானச் சான்று, முன்பதிவு அல்லது ஆவணங்கள் தேவையில்லை. வயது, பொருளாதார நிலை போன்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும் பயன்பெறலாம்

சாதாரண காயங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை உறுதி செய்யப்படும்; கடுமையான நிலைகளில் 48 மணி நேரத்திற்குள் அவசர சிகிச்சை வழங்கப்படும். தேசிய அவசர எண் 112 உடன் இணைக்கப்பட்டுள்ளதால், அழைப்பு விடுத்தவுடன் ஆம்புலன்ஸ் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனை ஒருங்கிணைக்கப்படும்.

கோல்டன் ஹவர் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செலவினை மோட்டார் வாகன விபத்து நிதி அல்லது காப்பீட்டு நிறுவனம் மூலம் மருத்துவமனை பெறும்; காப்பீடு இல்லாத நிலையில் அரசே வழங்கும். eDAR மற்றும் TMS 2.0 மூலம் செயல்முறை டிஜிட்டலாக நடைபெற்று, அங்கீகாரத்திற்குப் பிறகு 10 நாட்களில் பணம் செலுத்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author