நிதானமான சீனா உலகிற்கு முக்கிய பங்கு

லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மோதல்களால், உலகின் எதிர்காலம் குறித்து மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

நடைபெற்று வரும் சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சீனாவின் தூதாண்மை கொள்கை பற்றி விளக்கினார். பொறுப்பேற்கும் பெரிய நாடான சீனா, ஐ.நாவின் மைய தகுநிலை மற்றும் 2வது உலகப் போரின் வெற்றி சாதனைகளைப் பேணிக்காத்து, சமநிலையில் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தைக் கட்டியமைப்பதற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் சீனா, சர்வதேச இணக்க அமைப்பை உருவாக்கி, கம்போடியா மற்றும் தாய்லாந்து மோதலில் இணக்கம் செய்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறை முதலியவற்றின் மூலம் உலகின் வளரும் நாடுகளின் சுய நிர்ணயம் மற்றும் சுய வலிமையை முன்னெடுத்து வருகிறது. உலக அமைதி பேணிக்காப்பதற்கும், உலக நிர்வாக மேம்பாட்டுக்கும் சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உலகின் 2வது பெரிய பொருளாதார சமூகமாக, கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம், உலக பொருளாதார வளர்ச்சிக்குச் சுமார் 30 விழுக்காடு பங்காற்றி, உலகிற்கு நிலையான உந்து சக்தியாகத் திகழ்கிறது. பதற்றமான உலகில் சீனா நிதானமாக இருப்பது, சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் நன்மை புரியும் என்று நம்பப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author