இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், சொந்தமாக விமான சேவை நிறுவனத்தை தொடங்குவதற்கு அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்காக, விமான நிலைய உரிமையாளர்கள், விமான நிறுவனங்களில் பங்கு வைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு மத்திய அரசிடம் அதானி குழுமம் முறையிட்டுள்ளது.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் 2006-இல் தனியார்மயமாக்கப்பட்ட போது, அந்த விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள் எந்தவொரு அட்டவணைப்படுத்தப்பட்ட விமான நிறுவனத்திலும் 10 சதவீதத்திற்கு மேல் பங்கு வைத்திருக்கக் கூடாது என்ற விதி கொண்டுவரப்பட்டது.
இந்த விதியைத் தளர்த்துமாறு அதானி குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் புதிய திட்டம்: விமான நிறுவனமாக உருவெடுக்க விதிகளைத் தளர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை
