புதிய பாக்டீரியா வகையைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்  

Estimated read time 1 min read

முற்றிலும் புதிய வகையிலான சிவப்பு நிற பாக்டீரியா ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் கண்டறிந்துள்ளனர். அங்கே உள்ள ஒரு ஏரியில் இந்தப் புதிய வகையிலான பாக்டீரியாவை கண்டறிந்திருக்கின்றனர்.
ஆய்வுக்கூட சோதனையில் இந்த பாக்டீரியாவானது 85 நிமிடங்கள் வரை புறஊதா கதிர்களை எதிர்கொண்டு உயிர்பிழைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதன் சிவப்பு நிறம், புறஊதா கதிர்களில் இருந்து இதன் DNA-வை பாதுகாக்க உதவுகிறது.
பூமியில் உயிர்கள் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கும் இடங்களில் அண்டார்டிகா முதன்மையாக இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் ஒரு உயிர் தனித்துவமான பிழைக்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

You May Also Like

More From Author