மெக்சிகோ பிரதிநிதிகள் அவைத் தலைவர் செர்ஜியோ குட்டியர்ரெஸ் லூனா அண்மையில் சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
பெய்ஜிங்கைச் சென்றடைந்த முதல் நாளில், அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு அருங்காட்சியத்திற்குச் சென்று பார்வையிட்டார். இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணமாகும் என்று அவர் கூறினார்.
இந்த அருங்காட்சியகத்தில் சீன மக்களின் அந்த கட்டத்தின் வரலாறு அற்புதமான வழிமுறையில் காட்சியளிக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தின் மூலம் இது பற்றி தெளிவு பெற முடிகிறது என்றும், நாடு என்ற பார்வையில், சீனா எப்படி தன்னை வல்லரசாக மாறிக்கொண்டுள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்றும் குட்டியர்ரெஸ் கூறினார்.
மேலும், சீன-லத்தின் அமெரிக்க உறவின் விரிவான வளர்ச்சி மக்களுக்கு மேலும் அருமையான வாழ்க்கையைப் படைக்கும் பாதைக்கு எங்களுக்கு வழிகாட்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
தற்போது ஒருதரப்புவாதம், மேலாதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், பேச்சுவார்த்தை மற்றும் ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பதில் நாங்கள் ஊன்றி நிற்க வேண்டும் என்று அவர் கூறினார்.