சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்தில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 7 இலட்சத்து 73 ஆயிரம் கோடி யுவானுடன், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 4 இலட்சத்து 2 ஆயிரம் கோடி யுவானுடன், 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடனான மொத்த வர்த்தக தொகை 60 ஆயிரத்து 971 கோடி யுவானாக இருந்தது. இது 16.9 விழுக்காடாக குறைந்துள்ளது.
சீனாவில் புதிய தொழில் துறைகளும் பாரம்பரிய தொழில் துறைகளும் ஒருங்கிணைந்த இரட்டை வளர்ச்சி முறைமை உருவாக்கப்பட்டது. நடுத்தர மற்றும் உயர் உற்பத்தி தொழில் துறையின் ஏற்றுமதி வேகமாக அதிகரிப்பதுடன், வணிகப் பொருட்களின் போட்டி ஆற்றலும் மேலும் வலுவடைந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
