உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 18ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையின் இத்திங்களுக்கான தலைவர் நாடான சீனாவின் முன்மொழிவுடன், பல தரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலக மேலாண்மையை சீர்திருத்தம் செய்து மேம்படுத்துவது பற்றிய உயர் நிலை கூட்டம் நடைபெற்றது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஐ.நா தலைமைச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் இதில் தற்போதைய உலக நிலைமை குறித்து உரைநிகழ்த்தினார்.
ஐ.நா பாதுகாப்பவையின் 100க்கும் மேலான உறுப்பு நாடுகளின் உயர் நிலை பிரதிநிதிகளும் வெளியுறவு அமைச்சர்களும் இதில் பங்கெடுத்தனர்.
வாங்யீ இதில் 4 கருத்துகளை முன்வைத்தார்.
இறையாண்மை சமத்துவத்தில் ஊன்றி நிற்க வேண்டும். நேர்மை மற்றும் நீதியை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். செயல் சார்ந்த விதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.