தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை: தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வெளுக்கப்போகும் மழை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மார்ச் 11: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மார்ச் 12 முதல் 15 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
மார்ச் 16: நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Please follow and like us:

More From Author