தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சம்பா, தாளடி பயிர்களை நடவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தனியார் உரக்கடைகளில் டிஏபி, பொட்டாசியம் உள்ளிட்ட உரங்களை வாங்கினால் மட்டுமே, யூரியா தரப்படும் என உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த வேளாண் துறை அதிகாரிகள், யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யூரியா உரத்தை வழங்க மற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் தனியார் உர உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
