மக்களே உஷார்..! இனி சிலிண்டரை பதுக்கினால் சிறை தான்..!

Estimated read time 1 min read

‘எஸ்மா’ எனப்படும் அத்தியவாசிய பொருள் சட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வந்ததால், இனி சமையல் காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்றாலோ, பதுக்கலில் ஈடுபட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

எஸ்மா- (Essential Services Maintenance Act) என்பது அவசிய பொருட்கள் பராமரிப்புச் சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் வணிகர்கள் அல்லது தனி நபர்கள் சிலிண்டர்களை பதிக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். எரிவாயு விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்கு தடையில்லாமல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தை உலுக்கும் கேஸ் கட்டுப்பாடு :

சென்னையில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ டிரைவர்கள் பல மணி நேரம் காத்திருந்து, ஆட்டோக்களை இயக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் அன்றாட வருமானத்தை கடுமையாகப் பாதித்துள்ளது, இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாடும் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்தில், பல்வேறு வகையான டிபன் மற்றும் அரிசி உணவு வகைகள் வழங்கப்படாது என ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் எல்.பி.ஜி கேஸ் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆட்டோ சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே உணவகங்கள் மூடப்பட்டு வரும் சூழலில், தற்போது ஆட்டோ சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது. சப்பாத்தி மற்றும் தோசை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலவை சாதங்கள் வழங்கப்படும் வாரத்தில் இருமுறை அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author