இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

Estimated read time 1 min read

இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐஜேகே சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். அதிமுக அங்கம் வகிக்கும் NDA கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டாக்டர் ரவி பச்சமுத்து, “மக்களின் எண்ணங்களையும், உரிமைகளையும் ஒலிக்கும் குரலாக உண்மையை உரக்கச் சொல்லும், துணிச்சலின் அடையாளமாக விளங்கும் மைக் சின்னத்தை ஐஜேகேவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author