தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்!

Estimated read time 1 min read

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் (102.2 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author