தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா!

Estimated read time 1 min read

இந்தியாவில் நடைபெற்ற தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் ஹரியானா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மஹாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவில் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் மகாராஷ்டிரா – ஹரியானா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட நேர முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தது.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூட் – அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் ஹரியானா 3-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த இறுதிப்போட்டியில் ஹரியானா அணியில் தீபிகா 1 கோல் அடித்தார். அதேபோல் நவ்னீத் கவுர், உஷா மற்றும் சோனிகா ஆகியோர் சூட் – அவுட்டில் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர். ஆனால் மகாராஷ்டிரா அணியில் அக்ஷதா அபஸ்கோ மட்டுமே 1 கோல் அடித்தார்.

ஹரியானா அணி இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2013 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்களில் ஹரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author