மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
133 பேரைக் கொன்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கொராசன்(ஐஎஸ்ஐஎஸ்-கே) பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையில், இந்த படுகொலையை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை தடுத்து வைத்து விசாரிக்கும் காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக 11 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “குற்றவாளிகள், அமைப்பாளர்கள் மற்றும் இந்த படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் ஆகியோர் நியாயமான மற்றும் தவிர்க்க முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.