மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்வாகம், சட்டமியற்றல், நீதி ஆகிய நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்வாகம், சட்டமியற்றல், நீதி ஆகிய நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் டிசம்பர் 19ஆம் நாள் மக்கௌவில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக, நிர்வாக அதிகாரி ஹே யீச்செங்கின் தலைமையில், மக்கௌவின் நிர்வாகம், சட்டமியற்றல், நீதி ஆகிய நிறுவனங்கள், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியுடன் பின்பற்றி, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை சட்டத்துக்கிணங்க நிர்வாகம் செய்து, மக்கௌவின் செழுமை மற்றும் நிதானமான வளர்ச்சிக்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளன.
நடப்பு சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணியை மத்திய அரசு வெகுவாகப் பாராட்டியது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முந்தைய அரசுகள் மற்றும் பல்வேறு சமூக வட்டாரங்களின் முயற்சிகளுடன், மக்கௌ பாய்ச்சல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
மக்கௌவில் “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் நடைமுறை பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில், சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய அரசின் நிர்வாகத்துக்கும், மக்கௌவின் வளர்ச்சிக்கும் நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்தார்.