முன்னாள் இந்திய ஆண்கள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் பிறந்தநாளை ஒட்டி, ‘டாடா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கங்குலியாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் போஸ்டர், 2002-ல் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் நாட்வெஸ்ட் கோப்பை வெற்றிக்கு பிறகு லார்ட்ஸ் பால்கனியில் இருந்து அவர் சட்டையை அசைத்துக் கொண்டாடிய மறக்க முடியாத தருணங்களில் ஒன்றை ரீகிரியேட் செய்தது.
இந்தப் புகைப்படம், கங்குலியின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட ஒரு புதிய கட்டத்துடன் நீண்ட காலமாக தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த போஸ்டர் வெளியீட்டிற்கு கங்குலியும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
‘டாடா’: சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது; ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
