பழைய புரட்சிகர பகுதிகளின் மறுமலர்ச்சி குறித்து சீன அரசின் முன்மொழிவுகள்

பழைய புரட்சிகர பகுதிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் படையின் வேராகும். இப்பகுதிகளிலுள்ள மக்கள் சீர்திருத்த வளர்ச்சியின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு இன்பமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது அனைத்து மக்களின் கூட்டு செழுமையை முன்னேற்றுவதற்கான அடிப்படை கடமையாகும்.

பழைய புரட்சிகர பகுதிகளின் மறுமலர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் ஒப்புதலுடன் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

அதாவது, உள்ளுர் நிலைமைக்கிணங்க சிறப்பு தொழிலை வளர்க்க வேண்டும். பிரதேசத்தில் நகரப்புற மற்றும் கிராமப்புறத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.

அடிப்படை வசதி மற்றும் பொது சேவையின் குறைப்பாட்டைச் சரிப்படுத்த வேண்டும். கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைசாலிகளுக்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டும். உத்தரவாத அளவை விரிவாக்க வேண்டும்.

 

You May Also Like

More From Author