விஜயின் ஜனநாயகன் படத்திற்கு ரூ.120 கோடி நஷ்டம்? ரத்தானது ஓடிடி ஒப்பந்தம்  

Estimated read time 0 min read

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படம் என்று கருதப்படும் ஜனநாயகன் படத்தின் மூலம் ஒருபுறம் தொழில்முறை நெருக்கடிகளையும், மறுபுறம் தனிப்பட்ட வாழ்வின் சோதனைகளையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கை வாரியத்தில் எதிர்கொண்டுள்ள சிக்கலால் தற்போது காலவரையறையின்றி தள்ளிப்போயுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜனநாயகன் படத்தின் திரையரங்கிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஓடிடி உரிமையை சுமார் ₹120 கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கியிருந்தது.

ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்தத் தெளிவும் இல்லாததாலும், தணிக்கை குழுவின் இழுபறியாலும் அந்த நிறுவனம் தற்போது இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது படத் தயாரிப்பாளர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author