13ஆவது உலகளாவிய பாகு மன்றக் கூட்டத்தில் சீனா மற்றும் உலகளாவிய நிர்வாக முன்மொழிவு என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டம் மார்ச் 13ஆம் நாள் நடைபெற்றது.
கொந்தளிப்பு மற்றும் மாற்றங்கள் நிறைந்திருக்கும் உலகிற்கு சீனாவின் உலகளாவிய நிர்வாக முன்மொழிவு நிலைத்தன்மையை வழங்கியுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னாட்டு பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அசர்பைஜான் பொருளாதாரத் துறை அமைச்சர் மிகையில் ஜாப்பரோவ் கூறுகையில், சீனாவின் உலகளாவிய நிர்வாக முன்மொழிவை அசர்பைஜான் ஆதரிக்கிறது என்றும், தற்போதைய சர்வதேச ஒழுங்கு கடும் சவால்களை எதிர்நோக்குவதுடன், உலகின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு சீனா தீர்வுமுறையை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஸ்லோவேனியாவின் முன்னாள் அரசுத் தலைவர் போருட் பஹோர் Borut Pahor கூறுகையில், சீனா உலகளாவிய நிர்வாக முன்மொழிவின் மூலம் சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச ஒழுங்கின் சீர்திருத்தத்தை முன்னேற்றி, உலகின் தெற்கு பகுதியிலுள்ள மேலதிக நாடுகளுக்கு கருத்து வெளிப்பாட்டுரிமையை கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், எந்த வடிவிலான மோதலிலும் ஈடுபடாத சீனா, உலகின் நிலைத்தன்மைக்கு முக்கிய ஆதாரத்தூண் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
13ஆவது உலகளாவிய பாகு மன்றக் கூட்டம் மார்ச் 12 முதல் 14ஆம் நாள் வரை அசர்பைஜானின் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில், உலக பாதுகாப்பு, பலதரப்புவாதம், டிஜிட்டல் நிர்வாகம், நிலையான வளர்ச்சி ஆகிய கருப்பொருட்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
