அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்! போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்  

Estimated read time 1 min read

அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களைப் பயன்படுத்தி ஈரான் எல்லைக்குள் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிக முக்கியமான ஐந்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான ‘ஃபார்ஸ்’ தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஐந்து முக்கிய இடங்களைப் பட்டியலிட்டுள்ளது.
1. துபாயின் ஜெபல் அலி மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்.
2. அபுதாபியின் பராகா அணுமின் நிலையம்.
3. அல் தவீலா மின் நிலையம்.
4. துபாயின் எம் ஸ்டேஷன்
5. முகமது பின் ரஷித் சூரிய ஆற்றல் பூங்கா.

You May Also Like

More From Author