ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: நாடு முழுவதும் இணையம் முடக்கம்!  

Estimated read time 1 min read

ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி விடுத்த அழைப்பை ஏற்று, வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் “சர்வாதிகாரமே ஒழிக” என முழக்கமிட்டனர்.
இந்த எழுச்சியை ஒடுக்க ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது.
இது குறித்து AP வெளியிட்ட செய்தியில், ஈரான் தற்போது ஒரு முழுமையான ‘இணைய இருட்டடிப்பு’ சூழலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், விமான போக்குவரத்துகளும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author