உள்ளூர் நேரப்படி ஆக்டோபர் 9ஆம் நாள் பிற்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தலைமையமைச்சருமான லீச்சியாங், வட கொரியத் தலைநகர் பியொங்யாங்கில், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச்
செயலாளரும் தேசிய விவகார ஆணையத் தலைவருமான கிம் ஜோங்–உன்னைச் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், வட கொரியாவுடன் இணைந்து, இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் அதி உயர் தலைவர்களின் கூட்டுத் தலைமையில், இரு தரப்புறவை தொடர்ந்து முன்னேற்றி புதிய வளர்ச்சியைப் பெற சீனத் தரப்பு பாடுபட விரும்புகின்றது என்றார்.
வட கொரியாவுடன் இணைந்து பல தரப்புவாதத்தை நனவாக்கிச் செயல்படுத்தி, சர்வதேச ஒழுங்குகள் மேலும் நியாயமான, சரியான
வளர்ச்சித் திசையை நோக்கி வளர்வதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
கிம் ஜொங்–உன் கூறுகையில், வட கொரிய–சீன உறவு மிகவும் உறுதியாக விளங்குகிறது. சர்வதேச நிலைமை எப்படி மாறினாலும், இரு தரப்புகளின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புறவை வலுப்படுத்துவது, வட கொரியத் தொழிலாளர் கட்சி மற்றும் அரசின்
உறுதியான நிலைப்பாடாகும். இது, பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கும் துணை புரியும் என்றார்.