நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

Estimated read time 1 min read

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது.
வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்றே பல்வேறு முக்கிய விவகாரங்களில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்பிக்கள் இணைந்துள்ள தேசிய குடிமக்கள் கட்சி(NCPI) அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் கூட்டாக வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

You May Also Like

More From Author