ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழிகள் என்ற நிகழ்ச்சி கசகஸ்தானில் ஒளிபரப்பப்படவுள்ளது
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டு, கசகஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, சீன ஊடக குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழிகள் என்ற நிகழ்ச்சியின் கசாக் மொழியிலான பதிப்பு ஜுலை 2ஆம் நாள் கசகஸ்தானில் ஒளிபரப்பப்படவுள்ளது. இது குறித்து கசகஸ்தானின் பல்வேறு துறையினர் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
பொது செல்வம், உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண்பாட்டு பரவல், நாகரிகத்தின் பல்வகைமை ஆகிய கருப்பொருட்களில், அரசு தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள் மற்றும் உரையாடல்களில் குறிப்பிட்ட சீனாவின் பழம்பெரும் நூல்கள் மற்றும் புகழ் பெற்ற பண்டைய வாக்கியங்களை இந்நிகழ்ச்சி தொகுத்துள்ளதுடன், ஷிச்சின்பிங்கின் அரசியல் விவேகம், ஆழ்ந்த பண்பாட்டு உணர்ச்சி, பரந்துபட்ட வரலாற்றுக் கண்ணோட்டம் மற்றும் உலக கண்ணோட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, சீன நவீனமயமாக்கத்தின் பண்பாட்டு அடிப்படையைப் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளது.
கசகஸ்தான் மக்கள் சீனாவின் நீண்டகால ஆழ்ந்த வரலாறு மற்றும் பண்பாட்டை மேலும் செவ்வனே உணர்ந்து, சீனத் தலைவரின் ஆட்சி சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கு இந்நிகழ்ச்சி உதவி செய்யும் என்று கசகஸ்தானின் பல்வேறு துறையினர் கருத்து தெரிவித்தனர்.