நியூயார்க்கில் வசந்தகால சீனா என்ற உலகளாவிய உரையாடல்

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில், ‘வசந்த காலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி மார்ச் 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீனா மற்றும் அமெரிக்காவின் வணிகம், கல்வி, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், புதிய சகாப்தத்தில் சீனாவைக் கவனிப்பதற்கான ஒரு முக்கியமான ஜன்னலாக, சீனாவின் வருடாந்திர இரண்டு கூட்டத்தொடர்கள் மீண்டும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றார். இக்கூட்டத்தொடர்களில் 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

உயர்தர வளர்ச்சிக்கான சீனாவின் திட்டங்கள் உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. உயர்நிலை திறப்பை விரிவுபடுத்தி சர்வதேச சுழற்சியுடன் சிறப்பாக இணைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தொடர்களில் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

திறப்பு கொள்கைக்கான சீனாவின் மனஉறுதியை இது மீண்டும் வெளிக்காட்டியுள்ளது. சீன பாணியுடைய நவீனமயமாக்கலின் சாதனைகளை உலகிற்கு நன்மை பயக்கும் வகையில் ஊக்குவிக்கவும், சீனாவின் உயர்தர வளர்ச்சியின் புதிய வாய்ப்புகளை உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றும் ஷென் ஹாய்சியோங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author