செசலில் சீனத் துணை அரசுத் தலைவர் பயணம்

Estimated read time 1 min read

சீனத் துணை அரசுத் தலைவர் ஹென்ட்செங் மார்ச் 28முதல் 30ஆம் நாள் வரை செசலில் பயணம் மேற்கொண்டு விக்டோரியாவில் அந்நாட்டின் அரசுத் தலைவர் ஹெர்மினியைச் சந்தித்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு சீன-செசல் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். உண்மையான பலதரப்புவாதத்தில் எப்போதும் ஊன்றி நின்றுள்ள சீனா, செசலுடன் இணைந்து சர்வதேச நீதி மற்றும் நியாயத்தையும் வளரும் நாடுகளின் கூட்டு நலன்களையும் கூட்டாகப் பாதுகாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஒரே சீனா எனும் கொள்கையில் செசல் உறுதியாக ஊன்றி நிற்கும் என்று ஹெர்மினி கூறினார். மேலும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய உலக முன்மொழிவுகளை அவர் வெகுவாகப் பாராட்டி சீனாவுடன் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீன-செசல் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட விழாவில் ஹென்ட்செங் பங்கேற்றார். 

You May Also Like

More From Author