ChatGPT மற்றும் AlphaFold உதவியுடன் புற்றுநோய் தடுப்பூசி தயாரித்து நாயைக் காப்பாற்றிய நபர்  

Estimated read time 1 min read

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்ல நாய்க்குத் தனிப்பயனாக்கப்பட்ட ‘mRNA’ தடுப்பூசியைத் தயாரித்து வியக்க வைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட ரோஸி என்ற நாய்க்கு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கீமோதெரபி போன்ற பாரம்பரிய சிகிச்சைகளுக்காகப் பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை.
புற்றுநோய் கட்டி சுருங்காத நிலையில், மிஷின் லேர்னிங் துறையில் 17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பால், தானே களத்தில் இறங்கத் தீர்மானித்தார்.

You May Also Like

More From Author