சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது, லே ஃபிகரோ செய்தித்தாளில் “சீனாவிற்கும் பிரான்சுக்கும் இடையில் தூதாண்மை உறவை நிறுவிய நினைவைக் பரவல் செய்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்துவது” என்ற கட்டுரையைச் மே 5ஆம் நாள் வெளியிட்டார்.
இக்கட்டுரையில் அவர் கூறுகையில், பிரான்ஸ் அரசுத் தலைவர் மார்க் லாங்கின் அழைப்பின் பேரில், பிரான்ஸில் மூன்றாவது அரசுமுறை பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. 2024ஆம் ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் கொள்கின்றது. பிரான்ஸுடன் தூதான்மை உறவை நிறுவிய நினைவைப் பரவல் செய்து, இரு நாட்டு உறவுக்கான தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. உயர் நிலை திறப்பை விரிவாக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கச் சீனா விரும்புகின்றது. பிரான்ஸுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலக அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கச் சீனா விரும்புகின்றது என்று குறிப்பிட்டார்.
தற்சார்ப்பு வாய்ந்த பெரிய நாடுகளான சீனாவும் பிரான்ஸும் நீண்ட வரலாற்றில் ஒவ்வொரு சந்திப்பும் மிகப்பெரிய ஆற்றலை வெளிக்காட்டி உலகில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புதிய வரலாற்றின் சந்திப்பில், இரு நாடுகளும் இணைந்து புதிய மற்றும் பெரிய சாதனைகளைப் படைத்து, இரு நாடுகளுக்கும் உலகிற்கும் நன்மை பயக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.