சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங் மாநகரில், ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் தலைவர் வியாச்செஸ்லாவ் வோலோடினை ஆகஸ்ட் 26ஆம் நாள் முற்பகல் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
நெருக்கடியான தற்போதைய உலகில் சீன-ரஷிய உறவு மிகவும் நிதானமான, பக்குவமடைந்த, நெடுநோக்கு வாய்ந்த பெரிய நாட்டுறவுகளில் ஒன்றாகும். சீன-ரஷிய உறவுக்கான உயர் நிலையை தொடர்ந்து வளர்ப்பது, இரு நாடுகளின் பொது மக்களின் நலன்களுக்கு ஏற்றது. இது, உலகின் அமைதிக்கான நிதான அடித்தளமாகும். பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து முன்னேற்றி, பரஸ்பர நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காத்து, உலகின் தெற்குலக நாடுகளுடன் இணைந்து, உண்மையான பலதரப்புவாதத்தைக் கடைபிடித்து, சர்வதேச ஒழுங்குகளை மேலும் நியாயமான, சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல செய்ய வேண்டும் என்றார்.
சந்திப்பின் போது வோலோடின் கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களுக்கே புதின் அன்பான மற்றும் அருமையான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் வழிக்காட்டுதலில், ரஷிய-சீன உறவு மேலும் ஆழமாகி, பல சாதனைகளைப் பெற்றுள்ளது. இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, இரு தரப்புகளின் சட்டமியற்றல் நிறுவனங்களின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவுக்கு மேலதிகமான சாதனைகளைப் பெற வேண்டும் என்றார்.