சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரப் பிரிவுத் தலைவர் ஹூங்லியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசியப் பிரிவின் கூட்டுச் செயலாளர் கௌரங்கலால் தாஸ் ஆகியோர் ஜூலை 23ஆம் நாள் புது தில்லியில் சீன-இந்திய எல்லை விவகாரத்துக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி அமைப்பு முறையின் 34ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவு, தேசியப் பாதுகாப்பு, குடிவரவு முதலிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளின்படி, சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 23ஆவது பேச்சுவார்த்தையின் சாதனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பும் ஆழமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதோடு, 24ஆவது பேச்சுவார்த்தையை நல்ல முறையில் கூட்டாக ஏற்பாடு செய்யவும் ஒத்துக்கொண்டன.
தூதாண்மை மற்றும் இராணுவத் துறையிலான பரிமாற்றங்களை நிலைநிறுத்தி இரு நாட்டு எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்கவும் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன.