ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு: போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்க நட்பு நாடுகள் மறுப்பு  

Estimated read time 0 min read

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளே இதற்கு தயக்கம் காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளே அந்தப் பகுதியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.
“அமெரிக்கா இப்போது ஹார்முஸ் ஜலசந்தியை அதிகம் சார்ந்திருக்கவில்லை. சீனா போன்ற நாடுகள்தான் தங்களுக்குத் தேவையான பெரும்பான்மையான எண்ணெயை அங்கிருந்து பெறுகின்றன. எனவே, அவர்கள் தங்கள் சொந்தப் பகுதியை பாதுகாக்க முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author