பெய்தாவ் பயன்பாடு பற்றிய 3ஆவது சர்வதேச மாநாடு அக்டோபர் 24ஆம் நாள் சீனாவின் ஹூநான் மாநிலத்தின் சூசோ நகரில் நடைபெற்றது.
இதில், பெய்தாவ் தொழிலின் வளர்ச்சி பற்றிய நீல அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பெய்தாவ் புவியிடங்காட்டி அமைப்பு சேவை மற்றும் தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் ஏற்கனவே 130க்கும் அதிகமான நாடுகளுக்குப் பயன்பட்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், மேலும், சர்வதேச தர நிர்ணயங்களை உருவாக்கும் பணியில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்று பெய்தாவ் புவியிடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பு முறையுடன் தொடர்புடைய சர்வதேச தர நிர்ணயங்களை அடுத்தடுத்து வெளியிட்டு பயணியர் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் மீட்பு, செல்லிடப்பேசி தொலைத்தொடர்பு முதலிய பல துறைகளின் வளர்ச்சிப் பயன்பாட்டுக்கு உறுதியாக அடித்தளத்தைத் தந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.