குழந்தைகளுக்கு ஏற்ற சமூக கட்டுமானம் பற்றிய ஆவணம் சீனா வெளியீடு

முழு சமூகத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற சமூக கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் எனும் ஆவணத்தை, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீன அரசவையின் மகளிர் மற்றும் குழந்தை விவகாரக் கமிட்டியின் பணியகம் ஆகியவை இணைந்து அண்மையில் வெளியிட்டதாகவும், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை செயல்படுத்தி, சிறார்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களை உத்தரவாதம் செய்து, குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பன்முக வளர்ச்சியை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் தேசிய வளர்ச்சி மற்றும் சீருத்தித்த ஆணையம் மார்ச் 17ஆம் நாள் தெரிவித்தது.

நாட்டளவில் குழந்தைகளுக்கு ஏற்ற சமூக நகரங்களின் சோதனை முறை கட்டுமானத்திலான அனுபவங்கள் இந்த ஆவணத்தில் தொகுக்கப்பட்டு, நகரத்தை அடிப்படை பிரிவாகக் கொண்டு, சமூகக் கொள்கைகள், பொது சேவைகள், உரிமை நலன்களுக்கான உத்தரவாதம், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சூழல் ஆகிய முக்கிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கொள்கை நடவடிக்கைகள் வகுக்கபட்டுள்ளன.

குழந்தைகள் தொடர்பான பணி நிலையை உயர்த்த பல்வேறு இடங்களை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் அரசவையின் மகளிர் மற்றும் குழந்தை விவகாரக் கமிட்டியின் பணியகமும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author